பட்டப்பகலில் லண்டன் நகரை உலுக்கிய சம்பவம்: உயிருக்கு போராடும் மூவர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1247Shares

பிரித்தானிய தலைநகர் லண்டனின் நான்கு முக்கிய பகுதிகளில் நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு இளைஞர் உள்ளிட்ட மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

லண்டனின் Hackney, Ilford, Dagenham மற்றும் Barking ஆகிய பகுதிகளிலேயே இந்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர் உள்ளிட்ட மூவர் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

லண்டன் நகர பொலிசார் குறித்த சம்பவங்களை உறுதி செய்துள்ளனர். 30 வயது மதிக்கத்தக்க நபர் குற்றுயிராக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

New North Road பகுதியில் சுமார் 5.44 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதேப்போன்று Barking பகுதியில் மாலை 4.24 மணியளவில் வாள்வெட்டு காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை மீட்டு ஆபத்தான நிலையில் லண்டன் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இந்த நான்கு விவகாரங்கள் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் தொடர்புடைய வழக்குகளில் இதுவரை எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்