பிரித்தானியாவில் தோழியை காப்பாற்ற 230,000 பவுண்ட் நிதி திரட்டிய சிறுமி! அதன் பின் நடந்த சோக சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் தோழியின் சிகிச்சைக்காக போதுமான பணத்தை திரட்டிய நிலையில், அவர் இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lily Wythe(14) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் Cambridge-ல் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், 12 மாதங்களுக்குள் உயிரிழந்துவிடலாம், இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதனால் பெற்றோர் வேதனையில் இருந்த போது, அமெரிக்காவில் இதற்கு தகுந்த சிகிச்சை முறை இருக்கிறது என்பதை அறிந்துள்ளனர்.

Lillie Cotgrove(வலது) தனது தோழி Lily Wythe உடன் இருக்கும் புகைப்படம்(Paul Davey / SWNS) )

ஆனால் அதற்கு 300,000 பவுண்ட் தேவைப்படுவம் என்பதால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த போது Lily Wythe-ன் நெருங்கிய தோழியான Lillie Cotgrove(13) உதவ முன் வந்துள்ளார்.

அவர் சமூகவலைத்தள பக்கத்தில் நிதி திரட்டியுள்ளார். இதற்காக அவர் கோ பண்ட் பேஜ் என்ற பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் ஒருவருக்கு ஒரு பவுண்ட் விதம்(The One Pound Warriors) கொடுத்தால் உதவியாக இருக்கும், இவரின் உயிரைக் காப்பாற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பதிவிட்ட ஒரு வாரத்திற்குள் 230,000 பவுண்ட் நிதி திரட்டியுள்ளனர். நிதி திரட்டி சில வாரங்கள் கடந்த நிலையில், நேற்று Lily Wythe-ன் நிலைமை மிகவும் மோசமானதால், அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

Lily Wythe(Picture: SWNS)

இருப்பினும், Lily Wythe சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவருடைய தாய் Sarah Cotgroveதன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சனிக்கிழமை முதல் இன்று வரை என் மகள் போராடினாள், ஆனால் அவளை காப்பாற்ற முடியவில்லை, உயிரிழந்துவிட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்