பிரித்தானியாவில் ரகசிய கமெராவால் மனைவியிடம் சிக்கிய கணவன்! கண்ட அதிர்ச்சி காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கணவன் மீது சந்தேகம் அடைந்த மனைவி, அலுவலகத்தில் ரகசிய கமெரா ஒன்றை வைத்த நிலையில், அதில் இருந்த காட்சியைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் Lincolnshire-ல் இருக்கும் Cleethorpes-ஐ சேர்ந்தவர் Anthony Merrikin. 42 வயதாகும் இவர் மீது மனைவி சந்தேகம் அடைந்துள்ளார்.

அவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை கொடுக்கும் வகையில் இருந்ததால், இவர் வேறு யாருடனும் தொடர்பில் இருக்கிறாரா என்பதை அறிவதற்காக அலுவலகத்தில் ரகசிய கமெரா ஒன்றை பொருத்தியுள்ளார்.

அதன் பின் ரகசிய கமெராவில் இருந்த வீடியோவை பார்த்த போது, மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் Anthony Merrikin அலுவலகத்தில் 14 வயது சிறுமியுடன் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைக் கண்டுபிடித்தார்.

(Picture: Grimsby Telegraph/MEN Media)

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதால், இந்த வழக்கு Grimsby Crown நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. வழக்கின் விசாரணையில் Anthony Merrikin குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவருக்கு 6 வருடம் 9 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி, இது குழந்தைக்கு எதிரான மிகக் கடுமையான பாலியல் குற்றங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் கூறுகையில், நான் ஏதாவது நடக்கப்போகிறது என்ற அச்சத்தில் தொடர்ந்து வாழ்கிறேன். என்ன நடந்தது என்று யோசிக்க போராடுகிறேன். நான் நிறைய அழுகிறேன். இது நிறைய வலிக்கிறது.

டோனியைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்று முயற்சி செய்கிறேன், ஏனெனில் அது மோசமான நினைவுகளைத் தருகிறது. ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் இன்னும் சிந்திப்பதாக கூறியுள்ளார்.

குறித்த 14 வயது சிறுமியை Anthony Merrikin வளர்த்து வந்ததாகவும், அப்போது அவர் சிறுமியிடம் பாலியல் நடத்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முழு தகவல் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்