குழந்தைக்கு கொரோனா தாக்குதல் இல்லை என தெரிந்ததும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்த தாய்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தனது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்பது தெரியவந்ததும் பிரித்தானிய தாய் ஒருவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஸ்டீபனி அட்லாம் (28) என்கிற தாய், தனது 8 மாத மகன் ஜேக்கப்பிற்கு காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சைக்காக வொர்திங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தீவிர சோர்வு போன்ற கடுமையான அறிகுறிகளை ஜேக்கப் கொண்டிருந்ததால், மருத்துவர் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், அதற்கான சோதனைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

இதனால் பிரித்தானியாவில் கொரோனா தாக்குதலுக்குள்ளான இளம்வயது நபர் என்கிற பட்டியலில் தன்னுடைய மகனும் சேர்ந்துவிடுவானோ என்கிற அச்சம் ஸ்டீபனியை தொற்றிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் வெளியான சோதனை முடிவுகளில், ஜேக்கப்பிற்கு கொரோனா தாக்குதல் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனை கேட்டதும் ஸ்டீபனி அட்லாம், மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்