சாலையில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் அருகில் சென்ற நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! அவர் குறித்து தெரிந்த உண்மை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் சாலையில் பிச்சையெடுத்து கொண்டிருந்த கொலைகாரனை பாதுகாப்பு அதிகாரி கண்டுபிடித்த நிலையில் சிக்கியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Michael Foran என்ற நபரும் June Jones என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த சூழலில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்தனர்.

ஆனால் June Jones மீது Michael Foran மிகுந்த ஆத்திரத்தில் இருந்த நிலையில் அவரை பழிவாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

இந்நிலையுல் கடந்த 2018 டிசம்பர் மாதம் June Jones தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற Michael Foran அவரை கழுத்து, மார்பு என உடலின் 21 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

SWNS

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் Michael Foran பொலிசில் சிக்காமலேயே இருந்தார்.

இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாக Michael Foran அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் Liverpool-ல் உள்ள சிட்டி செண்டரில் பாதுகாவலராக William Smith என்பவர் இருந்த போது அருகிலிருந்த சாலையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பிச்சைக்காரரை பார்த்த போது அவருக்கு ஒருவித சந்தேகம் எழுந்தது.

பின்னர் அருகில் சென்று நோட்டமிட்ட போது அது கொலை குற்றவாளி Michael Foran என தெரியவந்ததையடுத்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

Liverpool Echo WS

இது குறித்து William Smith பொலிசுக்கு தகவல் கொடுத்த போது பொலிசார் குற்றவாளியின் புகைப்படத்தை அனுப்புமாறு கூறினார்.

அதன்படி செல்போனில் படம்பிடித்து William Smith அனுப்பினார்.

இதன்பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் கொலையாளி Michael Foran சுற்றிவைத்து கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபரில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் 17 ஆண்டுகளுக்கு அவரால் பரோலில் வெளியில் வர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் கொலையாளியை கண்டுபிடிக்க உதவிய William Smithக்கு விருது வழங்கப்படவுள்ளது.

மேலும் கொலையாளி Michael Foranக்கு உதவியதாக அவர் நண்பர் Keith O’Dwyer-க்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

SWNS

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்