நோய் அறிகுறி கொண்ட பிரித்தானியர்கள் இனி செய்யவேண்டியது இதுதான்: சுகாதாரத்துறை அறிவிப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஏராளமான மக்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தினால், தங்கள் வேலைகளில் இருந்து விலகி, 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் அதிகமானால் பொதுமக்கள் தங்களையே சுய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்க வேண்டும் எனவும், அதுவே கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உதவும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்டால், பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து 14 நாட்கள் வெளியே செல்லாமல் இருப்பது முதன்மையானது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிரித்தானியாவில் மட்டும் 400,000 மக்கள் கொல்லப்படலாம் என்ற நிபுணர்களின் எச்சரிக்கையும் தீயாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் தான் நான் பணிபுரிந்த எல்லாவற்றிலிருந்தும் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது என விஞ்ஞானி பேராசிரியர் நீல் பெர்குசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மட்டுமின்றி, மொத்த சனத்தொகையில் 60 சதவிகித மக்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இலக்காக வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்