7 வயது மகள் பள்ளிக்கு சென்றபோது மதிய உணவு கொடுத்த தந்தை! மாலையில் அந்த டிபன் பாக்சில் இருந்த கடிதம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் 7 வயது மாணவி தனக்கு கொடுக்கப்பட்ட மதிய உணவை சாப்பிடாமல் இருந்ததோடு உணவு இருந்த பாக்சில் எழுதி வைத்திருந்த கடிதத்தை பார்த்து அவரின் தந்தை திகிலடைந்த பின்னர் மகிழ்ச்சியடைந்தார்.

பீட் சிம்சன் என்ற நபருக்கு 7 வயதில் பியரல் என்ற மகள் உள்ளார்.

பியரல் சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கு கிளம்பிய போது அவருக்கு பீட், சாண்வெஜ் செய்து கொடுத்து அனுப்பினார்.

பின்னர் மாலை பள்ளியில் இருந்து பியரல் திரும்பிய போது சாண்வெஜ் எப்படி இருந்தது என கேட்டார். அதற்கு பதிலளித்த பியரல், நீங்கள் சாண்வெஜ் கொடுத்து அனுப்பிய பாக்சில் ஒரு கடிதம் உள்ளது அதை எடுத்து படியுங்கள் என கூறினார்.

swns

அதை திகிலுடன் பிரித்த பார்த்த போது, நான் சாண்வெஜ் சாப்பிடவில்லை, ஏனென்றால் எனக்கு hummas பிடிக்காது என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து பீட் கூறுகையில், எனக்கு உண்மையிலேயே கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என ஒரு வித பயம் இருந்தது.

அதை பார்த்த பின்னர் நான் செய்யும் சாண்வெஜ் அவளுக்கு பிடிக்கவில்லை என புரிந்து கொண்டேன்.

முதலில் கடிதத்தில் சாண்வெஜ் செய்து கொடுத்ததற்கு நன்றி என எழுதியிருக்கும் என நினைத்தேன்.

ஆனால் வேறு மாதிரி எழுதியிருந்தது, இந்த வயதிலேயே குழந்தைகள் எப்படி தங்களுக்கு பிடிக்காத உணவை வெறுக்கிறார்கள் பாருங்கள்.hummas-ல் அதிகளவு சத்துக்கள் இருந்த போதும் அதை என் மகள் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

swns

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்