பிரித்தானியாவை உலுக்கும் கொரோனா வியாதி: பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
#S

சீனாவிலிருந்து திரும்பிய ஆறாவது நபருக்கும் உயிர் கொல்லும் கொரோனா வியாதி அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நோயாளிகள் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கொரோனா வியாதி பாதிப்புக்கு உள்ளான 6 பேரும் யார் யார் என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

ஆனால் இவர்கள் 6 பேரும் வுஹான் மாகாணத்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மாகாணத்தில் மட்டும் இதுவரை 17 பேர் மரணமடைந்துள்ளனர். சுமார் 10,000 பேர் நோய் அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 608 பேர் நோய் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட 9 வெவ்வேறு நாடுகளில் கொரோனா வியாதி பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கண்டிராத இந்த கொடிய வியாதியானது அருகிலுள்ள ஒருவரிடமிருந்து இருமல் மற்றும் தும்மலினால் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் இன்று வெளிப்படுத்தியுள்ளது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உமிழ்நீர் அல்லது கட்டிப்பிடிப்பது போன்ற நெருங்கிய தொடர்புகளினாலும் கொரோனா வியாதி பரவக்கூடும்.

ஸ்காட்லாந்தில் ஐந்து நோயாளிகளுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இன்னும் கொரோனா வைரஸை உறுதிப்படுத்தப்படவில்லை.

அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது தொடர்பில் தெளிவானத் தகவல் இல்லை. ஆனால் அவர்கள் கிளாஸ்கோவின் ராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் எடின்பரோவின் ராயல் மருத்துவமனை ஆகிய இரு இடங்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவில் கொரோனா வியாதியை கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹான் உள்ளிட்ட 9 நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வுஹான் நகரத்தில் இருந்து விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, சீனாவில் பரவிவரும் கொடிய வியாதி காரணமாக தலைநகரில் ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...