கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சீனாவில் இருந்து வந்த பயணிகளுக்கு பிரித்தானியாவில் சோதனை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

சீனாவில் இருந்து காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வந்த நான்கு பயணிகளுக்கு ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலானது சீனா துவங்கி உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதனை தடுத்து நிறுவதற்கான வேலைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வைரஸ் தாக்குதலால் வுஹான் நகரைச் சேர்ந்த 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சீனாவில் 518 பேர் என உலகநாடு முழுவதும் சேர்த்து 526 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வுஹானிலிருந்து திரும்பிய நான்கு பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர்களில் மூன்று பேர் எடின்பர்க்கில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மற்றவர் கிளாஸ்கோவின் ராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் சீனாவிலிருந்து அனைத்து விமானங்களிலும் வரும் பயணிகளை சரிபார்க்குமாறு சுகாதார செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...