எத்தனை முறை செடி வைத்தாலும் வளராத தோட்டம்: பொலிசாரால் வெளிச்சத்துக்கு வந்த திகில் சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒரு பெண் தனது தோட்டத்தில் எத்தனை முறை பூச்செடிகள் வைத்தாலும் அவை வளராமல் போவது கண்டு ஆச்சரியமடைந்திருக்கிறார்.

பின்னர் ஒருநாள் அவரது வீட்டுக்கு பொலிசார் மோப்ப நாய்களுடன் வந்தபோதுதான், அவருக்கு உண்மை தெரியவர, திகிலடைந்துள்ளார்.

நாட்டிங்காம்ஷையரைச் சேர்ந்த Sue Bramley (51), ஒரு நாள் காலை தனது வீட்டின்முன் மோப்ப நாய்களுடன் பொலிசார் வந்துநிற்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.

அவரது வீட்டு தோட்டத்தை பார்வையிட விரும்பிய பொலிசாரை அவர் அங்கு அழைத்துச் செல்ல, அவர்களது மோப்ப நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் நின்றுள்ளன.

அந்த குறிப்பிட்ட இடத்தில் எத்தனை முறை பூச்செடிகள் நட்டும் அவை வளராமலே போனதால், அந்த இடத்தில் மார்பிள் போட்டு தளம் அமைத்துவிட்டார் Sue.

Credit: PRESS GANG NEWS (C)

சரியாக அதே இடத்தை மோப்பநாய்கள் காட்டிக்கொடுக்க, பொலிசார் அந்த இடத்தைத் தோண்ட, உள்ளே இரண்டு உடல்கள் போர்வையில் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது தெரியவர அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அனைவரும். பின்னர்தான் உண்மை தெரியவந்துள்ளது.

அந்த வீட்டில் முன்பு வசித்த Susan Edwards (56) மற்றும் அவரது கணவர் Christopher (57) அந்த உடல்களை அங்கு புதைத்துள்ளர்கள். Susanஇன் தாய் திருமதி Wycherley (63), தனது கணவர் William (85)ஐ அடித்துக் கொன்றுள்ளார்.

இந்த உண்மை தெரியவந்ததும், கோபத்தில் தன் தாயை சுட்டுக்கொன்றுள்ளார் Susan. பின்னர் நடந்ததை தனது கணவரிடம் கூற, இறந்த பெற்றோரின் உடல்களை இருவருமாக தோட்டத்தில் புதைத்துவிட்டு, இருவரும் சுற்றுலா சென்றுள்ளதாக அயலகத்தாரிடம் கூறிவிட்டு, அரசுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவர்களது ஓய்வூதியத்தையும் தவறாமல் வாங்கியிருக்கிறார்கள்.

Credit: PA:Press Association

சிறிது காலம் சென்றபின், அந்த வீட்டை Sue Bramleyக்கு விற்றுவிட்டு வேறிடத்துக்கு சென்றுள்ளார்கள் தம்பதியர்.

பொலிசாருக்கு ரகசிய துப்பு ஒன்று கிடைத்ததையடுத்து, தம்பதியை கைது செய்த பொலிசார், கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் மீட்டுள்ளார்கள்.

தம்பதிக்கு குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் சிறை என்ற நிபந்தனையுடன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Credit: Handout

Credit: PA:Press Association

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...