கர்ப்பமாக இருந்த போது பெண்ணுக்கு வந்த மார்ப்பக புற்றுநோய்! பின்னர் அவருக்கு நடந்து வரும் அதிசயங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கர்ப்பமாக இருக்கும் போது மார்ப்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற்ற நிலையில் அது தொடர்பிலான தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Roisin என்ற பெண் கர்ப்பமாக இருந்த போது 34 வார கர்ப்பத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் Roisin-க்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

நோய்க்கான சிகிச்சையை எடுத்து கொண்டே அவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

Ivy என குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்ட நிலையில், தான் பெற்றெடுத்த குழந்தை வளருவதை பார்க்க நான் உயிரோடு இருக்க மாட்டேனா என Roisin-க்கு பயம் ஏற்பட்டது.

ஆனால் மகள் நடப்பது, பேசுவது, பற்கள் வளருவது என அனைத்தையும் Roisin பார்த்து வருகிறார்.

அவரின் நோயை குணப்படுத்த முடியாது எனவும், எப்போதும் வேண்டுமானாலும் அவர் இறந்துவிடுவார் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால் உயிரை கையில் பிடித்து கொண்டு மகள் வளருவதை Roisin தொடர்ந்து பார்த்து வருவது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் உள்ளது.

இது குறித்து Roisin கூறுகையில், எல்லா தாய்க்கும் தங்கள் குழந்தைகள் வளருவதை பார்க்க வேண்டும் என ஆசை இருக்கும், ஆனால் எனக்கு அது நிறைவேறுமா என பயந்தேன்.

ஆனால் என் மகள் எனக்கு தைரியத்தை கொடுத்தாள். அவள் என்னுடைய சூப்பர் ஹிரோ.

என்னுடைய வாழ்க்கையும் நேரமும் மெதுவாக நகர வேண்டும் என விரும்புகிறேன், அப்போது தான் என் மகளுடன் நான் வெகுநாட்கள் இருக்க முடியும் என உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...