அம்மா எழுந்திருங்கம்மா: தாய் இறந்தது தெரியாமல் தட்டி எழுப்ப முயன்ற குட்டிக்குழந்தைகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தங்கள் தாய் இறந்துபோனார் என்பது தெரியாமல், அவரை குட்டிக்குழந்தைகள் இருவர் எழுப்ப முயன்ற சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

பிரித்தானியாவிலுள்ள Bloxwich என்ற இடத்தைச் சேர்ந்த Danielle Talbot (30) என்ற பெண், திடீரென தனது பெற்றோருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி, உடனே தன்னைக் காண வருமாறு தெரிவித்துள்ளார்.

20 நிமிடங்களில் Talbotஇன் பெற்றோர் வீடு வந்து சேர்ந்தபோது, அவர் இறந்துகிடப்பதையும், அவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு, அவரது குட்டிப்பையன்களான Ollieயும் Jackம் அம்மாவை எழுப்ப முயன்றுகொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்கப்பட, தாயை எழுப்ப முயன்ற குழந்தைகள் மட்டுமின்றி, வந்த மருத்துவ உதவிக்குழுவினராலும் Talbotஐ காப்பாற்ற முடியவில்லை.

Credit: BPM Media

இரத்தக் கட்டி ஒன்று, Talbotஇன் உயிரைப் பறித்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கருத்துகிறார்கள். Talbotஇன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சில பிரச்சினைகள் காரணமாக Talbotஆல் தாயாக முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட, அதையும் மீறி அற்புதமாக அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் உருவாக, மகிழ்ச்சியில் வானத்திலேயே மிதந்தார் அவர் என்ற செய்தியை கூறி கண்ணீர் வடிக்கிறார்கள் அவரது உறவினர்கள்.

அப்படி தவமிருந்து பெற்ற பிள்ளைகளுடன் அவரால் வாழ முடியாமல் போய்விட்டதே என குடும்பமே கவலையில் ஆழ்ந்துள்ளது.

Credit: GoFundMe

Credit: BPM Media

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...