நான்கு மாதங்களாக ஒலிக்காத முதியவரின் தொலைபேசி... மறந்துபோன உறவினர்கள்: கல்லறையில் தெரிந்த உண்மை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நான்கு மாதங்களாக தனது தொலைபேசி ஒலிக்காததால் தன்னை உறவினர்கள் அனைவரும் மறந்து போனார்களோ என்ற சந்தேகம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆலன் ஹட்டேலுக்கு ஏற்பட்டது.

ஏதோ தவறு நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்ட ஆலன், சில நண்பர்களைப் பார்ப்பதற்காகச் சென்றார்.

ஆலனைப் பார்த்த அவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்கள். தன்னைக் கண்டு ஏன் அவர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள் என்பது ஆலனுக்கு புரியவில்லை.

பின்னர்தான், ஆலன் இறந்துபோனதாக தாங்கள் எண்ணிக்கொண்டிருப்பதாக நண்பர்கள் கூறியுள்ளார்கள்.

ஏன் அப்படி எண்ணினார்கள் என்று கேட்டபோது ஆலனுக்கு ஒரு அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்கள் நண்பர்கள்.

Credit: Matt Heath-Smith

அவர்களது பகுதியில் உள்ள இடுகாட்டில் ஆலனின் கல்லறை இருக்கிறது என்ற தகவல்தான் அது.

உடனே ஆலன் இடுகாட்டுக்குச் செல்ல, அங்கு அவரது பெயரும், அவரது முன்னாள் மனைவி பெயரும் பொறித்த கல்லறை ஒன்று அங்கு இருந்திருக்கிறது.

ஆலனின் முன்னாள் மனைவி, 26 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சேர்ந்து வாழும்போது, தானும் தன் கணவரும் ஒரே இடத்தில் புதைக்கப்படவேண்டும் என்பதற்காக ஒரு கல்லறையை செய்துவைத்திருக்கிறார்.

Credit: Paul Reid

ஆனால், பின்னர் அவர்கள் பிரிந்துவிட, கல்லறை மட்டும் அப்படியே இருந்திருக்கிரது.

இந்த விடயம் ஆலனுக்குத் தெரியாது. தற்போது உண்மை தெரியவந்த நிலையில், தான் உண்மையில் புதைக்கப்படவே விரும்பவில்லை, எரிக்கப்படத்தான் விரும்புகிறேன் என்று கூறியுள்ள ஆலன், அந்த கல்லறை மீது உறை ஒன்றைப் போட்டு மூட திட்டமிட்டிருக்கிறார்.

Credit: Paul Reid

Credit: Matt Heath-Smith

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...