குழந்தை பெற்று கொள்ள முயன்று வந்த தம்பதி! வீங்கிய மனைவியின் வயிறு... ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தம்பதி குழந்தை பெற்று கொள்ள முயற்சித்த நிலையில் மனைவிக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Surrey-வை சேர்ந்தவர் Marcel. இவருக்கும் Amy Van Wyk என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் தம்பதி குழந்தை பெற்று கொள்ள முயன்றும் Amy-யால் கருத்தரிக்க முடியவில்லை. கடந்த 2016-ல் Amy-க்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அவர் சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் Amy-க்கு கருப்பை நீர்க்கட்டி உள்ளதாகவும், அதனால் அவருக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார்.

இதன் பின்னர் கடந்த 2018ல் Amy-க்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதோடு, வயிறும் பெரிதாக வீங்கியது.

Picture: Amy Van Wyk

இதையடுத்து மருத்துவமனையில் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அதன் முடிவில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதும், நோயானது தீவிரமடைந்துள்ளதும் தெரியவந்தது.

இதை கேட்டு Amy-யும் அவர் கணவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் Amy-ன் கருப்பை மற்றும் கருமுட்டை குழாயை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள்.

அதன்படி இரண்டும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. இதன் காரணமாக Amy இயற்கையாக குழந்தை பெற்று கொள்ளவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய Amy குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற என் கனவு சிதைந்துவிட்டது.

நான் எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே பின்பற்றி வந்தேன். எனக்கு எதனால் இவ்வளவு பெரிய நோய் ஏற்பட்டது என தெரியவில்லை.

புற்றுநோய் எனக்கு இன்னும் குணமாகவில்லை, அதற்கான சிகிச்சையை மிகுந்த வலியுடன் தொடர்ந்து எடுத்து வருகிறேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Picture: Amy Van Wyk

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...