என்ன ஆயிற்று மகாராணியாரின் பேரன்களுக்கு? பால் விளம்பரத்தில் நடிக்கும் இளவரசியின் மகன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணியாரின் பேரன்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, ஒருவர் சொந்தக் காலில் நிற்கப் போகிறேன் என்று மனைவியுடன் கனடாவுக்கு பறந்துவிட்டார், மற்றொருவர் பால் விளம்பரத்தில் நடிக்கிறார்!

இளவரசர் ஹரி சொந்தக்காலில் நிற்கப்போவதாக அறிவித்த நிலையில், திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் வேலை கேட்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ராஜ குடும்ப உறுப்பினாரான இன்னொருவர் பால் விளம்பரத்தில் நடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் மகாராணியாரின் மூத்த பேரனான பீற்றர் பிலிப்ஸ் (42). இவர் மகாராணியாரின் மகளான இளவரசி ஆன் உடைய மகனாவார்.

ஒரு பக்கம் ஹரியும் மேகனும் தங்கள் வருமானத்துக்காக தங்கள் ராஜ தலைப்புகளை பயன்படுத்தக்கூடாது என வற்புறுத்தப்பட்டிருக்க, இன்னொரு பக்கம் பீற்றர் நடித்திருக்கும் அந்த விளம்பரம் அவரை பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் என்று வர்ணிக்கிறது.

பீற்றர், சீன தொலைக்காட்சி ஒன்றில் பால் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஆனால், இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், ஹரி மேகனைப்போல் பீற்றருக்கும் அவரது சகோதரியாகிய சாராவுக்கும் HRH தலைப்பு கிடையாது.

அதாவது அவர்கள் His அல்லது Her Royal Highness என்று அழைக்கப்படமாட்டார்கள்.

இதற்கிடையில், ஏற்கனவே பீற்றர் தனது திருமண வீடியோவை பத்திரிகை ஒன்றிற்கு விற்று பணம் பார்த்தவர்தான்.

என்றாலும், இப்போது அவர், ராஜ குடும்ப உறுப்பினர் என்ற பெயரை பயன்படுத்தியுள்ளதால் கேள்வி எழுந்துள்ள நிலையில், பீற்றர் ஒரு தனி நபர் என்றும், அவரது தனிப்பட்ட தொழில் குறித்து அரண்மனைக்கு கவலையில்லை என்றும் அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...