5 நிமிடங்களுக்கான எரிபொருளே எஞ்சியுள்ளது: லண்டனில் பயணிகளை பதறவைத்த விமானி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பல திடீரென்று வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டதால் பயணிகள் பலரும் அவதிக்கு உள்ளாகினர்.

லண்டனில் இன்று பகல் ஹீத்ரோ விமான நிலையமானது திடீர் பரபரப்புக்கு உள்ளானது.

இப்பகுதி வான்பரப்பை இங்கிலாந்தின் வான்படை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, ஹீத்ரோ விமான நிலையம் திடீர் பரபரப்பில் மூழ்கியது.

சுமார் 5 விமானங்கள் Gatwick, Stansted மற்றும் Luton ஆகிய விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.

இதனிடையே பல எண்ணிக்கையிலான விமானங்கள் காலதாமதப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

மேலும் பல விமானங்கள் எரிபொருள் பற்றாக்குறையுடன் வானத்தில் வட்டமடித்துள்ளன.

இந்த நிலையில் விர்ஜின் அட்லாண்டிக் விமான பயணி ஒருவர் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

அந்த விமானத்தின் முக்கிய விமானி, இன்னும் 5 நிமிடங்களுக்கான எரிபொருள் மட்டுமே எஞ்சியுள்ளது என பயணிகளிடம் அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது அந்த விமானத்தில் இருந்த மொத்த பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக குறித்த பயணி நினைவுகூர்ந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த விமானமானது Gatwick விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

மிகவும் பரபரப்பாக இயங்கும் ஹீத்ரோ வான்பரப்பை வான்படை விமானம் ஒன்று பயன்படுத்திக் கொள்ள திடீர் அனுமதி கோரப்பட்டதாலையே இந்த இடையூறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...