176 பேர் பலியான விமான விபத்து... பிரித்தானியாவில் கூடி முக்கிய முடிவெடுத்த 5 நாடுகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஈரானிய துருப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தெஹ்ரான் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதன் பதிலை உலகம் கவனித்து வருவதாகவும் 5 நாடுகள் எச்சரித்துள்ளது.

பிரித்தானியா, கனடா, உக்ரைன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து வியாழக்கிழமை லண்டனில் முன்னெடுத்த அதிகாரிகள் கூட்டத்திற்கு பின்னர் வெளியிட்ட அறிக்கையில்,

ஈரான் "பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு திறந்த, முழுமையான, வெளிப்படையான சர்வதேச விசாரணையை நடத்த முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

ஜனவரி 8 ஆம் திகதி ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து உக்ரேனுக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது.

குறித்த ஏவுகணை தாக்குதலானது மனித தவறால் முன்னெடுக்கப்பட்டது என கடந்த சனிக்கிழமை ஈரானிய ராணுவம் ஒப்புக் கொண்டது.

[Henry Nicholls/Reuters]

தற்போது சடலங்களை திருப்பி அனுப்புவது தொடர்பான குடும்பங்களின் விருப்பங்களை மதிக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களை கண்ணியத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அடையாளம் காணும் செயல்முறையை நடத்துமாறு ஐந்து நாடுகளும் ஈரானைக் கேட்டுக் கொண்டுள்ளன.

குறித்த விமான விபத்தில் இறந்த அனைத்து உக்ரேனியர்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டு ஜனவரி 19 ஆம் திகதி மீண்டும் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

[Ebrahim Noroozi/AP]

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...