காருக்குள் பதுங்கிய பாம்பு... பிடிக்க தீயணைப்பு வீரர்கள் செய்த தந்திரம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பெண் ஒருவர் பாம்பு ஒன்றை கூண்டிலடைத்து தனது காரில் கொண்டு செல்லும்போது அது

தப்பிவிட, சாதுரியமாக அதைப் பிடித்துள்ளனர் தீயணைப்பு வீரர்கள்.

பிரித்தானியாவின் Hampshireஐச் சேர்ந்த ஒரு பெண் பாம்பு ஒன்றை கூண்டிலடைத்து வேறொரு இடத்துக்கு கொண்டு செல்லும்போது, அது கூண்டிலிருந்து தப்பியுள்ளது.

இறந்த எலி ஒன்றை வைத்து பாம்பை பிடிக்க முயன்றும் பாம்பு சிக்காததால், தீயணைப்பு வீரர்களின் உதவியை நாடியுள்ளார் அந்த பெண்.

அவர்களும் என்னென்னவோ செய்தும் பாம்பு சிக்காததால், கடைசியாக பாம்பு பிடிப்பவர் ஒருவரின் ஆலோசனையை நாடியுள்ளனர்.

அவர், காரிலுள்ள வெப்பமாக்கும் கருவியை இயக்கச் சொல்ல, அதேபோல் கார் வெப்பமடைந்ததும் அரை மணி நேரத்தில் அந்த பாம்பு டேஷ்போர்டுக்குள் இருந்து மெதுவாக தலையை நீட்டியுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பைப் பிடித்து, பை ஒன்றிற்குள் அடைத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைந்துள்ளனர்.

அந்த பாம்பு உண்மையில் நச்சுப்பாம்பு அல்ல, அது American corn snake வகையைச் சேர்ந்ததாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...