ஹரி மேகனின் பட்டங்களும், நிதியுதவியும் பறிக்கப்படவேண்டும்: இதுதான் பெரும்பாலான மக்களின் விருப்பம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணியாரை அவமதித்த இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவியின் பட்டங்கள் பறிக்கப்படுவதோடு, அவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த நிதியுதவியும் நிறுத்தப்படவேண்டும் என பொதுமக்களில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஹரியும்(35) அவரது மனைவி மேகனும் (38) விண்ட்சர் மாளிகையிலிருந்து வெளியேற்றப்படுவதோடு, அதை புதுப்பிக்க செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணமான 4.2 மில்லியன் பவுண்டுகளை அவர்கள் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்புவது தெரியவந்துள்ளது.

மக்களின் விருப்பப்பட்டியலில் 22 புள்ளிகள் கீழிறங்கி மேகன் பத்தாவது இடத்துக்கு சென்றுவிட்ட நிலையில், பிரித்தானிய மக்களின் செல்லமாக இருந்த ஹரி 20 புள்ளிகள் கீழிறங்கி ஐந்தாவது இடத்துக்கு வந்துவிட்டார்.

மக்களிடம் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், இளவரசர் வில்லியமுக்கா, ஹரிக்கா என்று கேட்டபோது 65 சதவிகிதம் பேர் வில்லியம் என்றும் 35 சதவிகிதம் பேர் ஹரி என்றும் தெரிவித்துள்ளனர்.

மகாராணியாரின் செல்லப்பேரன் என்ற பெயரையும் வில்லியம் பெற்றுவிட்டார். அதேபோல், இளவரசி கேட் 73 சதவிகிதம் பேரால் விரும்பப்படும் நிலையில், மேகனுக்கு 27 சதவிகித்தினரே வாக்களித்துள்ளனர்.

ஹரியும் மேகனும் நாட்டை விட்டு வெளியேற மகாராணியார் அனுமதிக்கலாமா என்று கேட்டதற்கு, 72 சதவிகிதத்தினர் அவர்களை மகாராணியார் அனுப்பிவிடவேண்டும் என்றும் 16 சதவிகிதத்தினர் அவர்களை பிரித்தானியாவிலேயே இருக்கச்சொல்லவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மொத்தத்தில், பிரித்தானிய இளவரசர் ஹரி மீதும், அவரது அமெரிக்க மனைவி மேகன் மீதும் மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers