புற்றுநோயால் கண்கள் துருத்திக்கொண்டு அவதியுற்ற இந்திய சிறுவன்: பிரித்தானிய பெண் செய்த உதவி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நான்கு வயது இருக்கும்போது இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்த ஒரு இந்திய சிறுவனுக்கு பார்வை கிடைக்க பிரித்தானிய பெண் ஒருவர் உதவியுள்ளார். அசாமைச் சேர்ந்த சாகர் டோர்ஜிக்கு நான்கு வயது இருக்கும்போது இரத்தப்புற்றுநோய் பாதித்தது.

அதனால், அவனடு கண்கள் பாதிக்கப்பட, கண்கள் முகத்துக்கு வெளியே துருத்திக்கொண்டு, இரத்தமயமாக காட்சியளித்து, பார்வையும் இல்லாமல் தவித்துவந்தான் அவன்.

அசாம் விவசாயிகளான அவனது பெற்றோர் உதவி கோரி பத்திரிகைகளில் விண்ணப்பித்திருந்தார்கள்.

அந்த செய்தியைக் கண்டு அசாம் அமைச்சர் Himanta Biswa, அவனது புற்றுநோய் கிச்சைக்காக அவனை பெங்களூரு கொண்டு செல்ல அரசைக் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், சாகரைக் குறித்து அறிந்த பிரித்தானிய முதலீட்டு வங்கியாளரான நீதா ஷிவா, அவனுக்கு பார்வை திரும்புவதற்கான அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். லண்டனில் வாழும் நீதா (44), சாகரின் வாழ்வையே மாற்ற உதவும் அந்த அறுவை சிகிச்சைக்காக 3,500 பவுண்டுகள் கொடுத்து உதவியுள்ளார்.

தற்போது ஏழு வயதாகும் சாகர், புற்றுநோயிலிருந்து விடுபட்டு, ஒரு கண்ணில் பார்வையும் திரும்பப் பெற்றுவிட்டான்.

பள்ளி செல்ல இருக்கும் சாகர், கால்பந்து விளையாடுவதிலும் ஆர்வம் காட்டிவருகின்றான்.

தங்கள் மகனுக்கு உதவியவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக நெகிழும் சாகரின் பெற்றோர், புற்றுநோய் குணமாகி, தங்கள் மகனால் பார்க்கவும் முடிவதை எண்ணி புளகாங்கிதம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...