மனித வெடிகுண்டு என சந்தேகிக்கப்பட்ட நபரால் பரபரப்பு: பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்த பொலிசார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றில் மனித வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் ஒருவர் காணப்பட்டதாக செய்தி கிடைத்ததையடுத்து அந்த இடத்தை பொலிசார் சுற்றி வளைத்தனர்.

பிரித்தானியாவின் Bournemouth பல்கலைக்கழக வளாகத்தில், ஜாகிங் உடையில் சட்டைக்குள் வெடிகுண்டு போன்ற எதையோ மறைத்துவைத்துக்கொண்டு ஒருவர் ஓடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

பொலிசார் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்ததோடு, மாணவர்களை வளாகத்திற்குள் வைத்து பூட்டினர்.

அங்கு பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்றும் வந்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், கத்தியுடனும் உடல் முழுவதும் இரத்தக்கறையுடனும் ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளும் பரவத்தொடங்கின.

வளாகத்தை சுற்றி வளைத்த பொலிசார் நேற்கொண்ட சோதனையில், குறிப்பிட்ட நபர் ஜாகிங் செல்பவர் என்பதும், அவர் சட்டைக்குள் அணிந்திருந்தது உடற்பயிற்சிக்காக அணியும் fitness vest என்பதும் தெரியவந்தது.

உண்மை தெரியவந்ததையடுத்து மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்