பிரித்தானியா அரசு குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி-மேகன் விலக முக்கிய காரணம் இது தான்: கசிந்தது முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா அரச குடும்ப பொறுப்பிலிருந்து இளவரசர் ஹரி-மேகன் தம்பதி விலகுவதற்கான முக்கிய காரணம் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, பிரித்தானியா மற்றும் கனடாவில் தங்கள் நேரத்தை செலவிடுவதற்காக அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், 'நிதி ரீதியாக சுயாதீனமாக' செயல்படவுள்ளதாகவும் அறிவித்து அனைவரையும் திகைக்க வைத்தனர்.

இந்நிலையில், அரச குடும்பத்தை விட்டு வெளியேற மேகன் மற்றும் இளவரசர் ஹாரி எடுத்த முடிவு, முக்கியமாக தங்கள் மகன் ஆர்ச்சியைப் பாதுகாக்கவே எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'குழந்தை ஆர்ச்சியை அரச வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்க விரும்புவதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரச குடும்ப வட்டாரத்துடன் தொடர்பில் உள்ள ஒருவர் கூறியதாவது, இளவரசர் ஹரியை திருமணம் செய்தவற்கு முன்பே மேகன் ஏற்கனவே தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

ஆனால், அரச குடும்ப பொறுப்பு, எவ்வளவு பெரியது என்பதை மேகன் உணரவில்லை.

குழந்தை ஆர்ச்சியுடன் தான் என்றென்றும் வாழ விரும்பும் வாழ்க்கை இதுவல்ல என்பதை மேகன் உணர்ந்துள்ளார். இதுபோன்ற வாழ்க்கை தனது மகனுக்கு வேண்டாம் என அவர் விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுக்கு முன்னர் இந்த ஜோடி ராணியுடன் கூட ஆலோசிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது, அரச குடும்ப பதவி வலகுவது தொடர்பில் இளவரசர் ஹரி-மேகன் உடனான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.

அவர்களின் விருப்பத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால், இதில் சிக்கலான பிரசினைகள் உள்ளன, இதற்கு ஒரு தீர்வு கிடைக்க சிறிது நேரம் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...