ஒரே நேரத்தில் வானில் தோன்றிய இரண்டு நிலவுகள்: ஒரு அபூர்வ வீடியோ!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரே நேரத்தில் வானில் இரண்டு நிலவுகள் தோன்றும் வீடியோ ஒன்று வெளியாகி மக்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

East Midlands பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், முதலில் வானில் முதல் நிலவைக் காண முடிகிறது.

அந்த நிலவு நகரவும், அதற்குப் பின்னால் இருந்து மற்றொரு நிலவு வெளிப்படுகிறது. ஆனால், இரண்டாவதாக தோன்றும் நிலவு, வழக்கத்துக்கு மாறாக வேகமாக சென்று மேகங்களுக்குள் மறைந்துவிடுகிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாக, அதை பார்வையிட்ட பலரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வீடியோவை காண

வழக்கம் போல் ஒருவர் இது ஒரு பறக்கும் தட்டாக இருக்குமோ என்று வேறு சந்தேகத்தைக் கிளப்பினார்.

ஆனால், மற்றொருவர், ஜனவரி 10ஆம் திகதி கிரகணம் ஒன்று ஏற்பட்டது, எனவே நீங்கள் பார்ப்பது நிலவும் சூரியனும் என்று கூறி சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...