இளவரசர் ஹரிக்கு 72 மணி நேர கெடு விதித்த பிரித்தானிய ராணியார்: இறுகும் அரச குடும்ப போர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியா அரச குடும்ப கடமைகளில் இருந்து இளவரசர் ஹரி குடும்பம் விலகுவதாக அறிவித்த நிலையில், அது தொடர்பான பேச்சுவார்த்தையை ராணியாரே முன்னெடுத்து நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா அரச குடும்பத்தில் இருந்தும் கடமைகளில் இருந்தும் இளவரசர் ஹரி குடும்பம் விலகுவதாக அறிவித்தது 93 வயதான ராணியாரை மனதளவில் பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது.

இளவரசர் ஹரி தமது முடிவை அறிவித்து ஒரு வார காலம் கடந்த நிலையில், 72 மணி நேரத்திற்குள் இந்த விவகாரம் தொடர்பாக உறுதியான ஒரு முடிவை மேற்கொள்ள அரண்மனை அதிகாரிகளுக்கு ராணியார் உத்தரவிட்டுள்ளார்.

தமது பேரப்பிள்ளையை அரச குடும்பத்திலேயே தக்கவைத்துக் கொள்ளும் உத்தியை கண்டறியவே ராணியார், இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் தாமே மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

மட்டுமின்றி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ராணியார் முடிவு செய்துள்ளார்.

(Image: Getty Images)

இதே காலகட்டத்தில் தான், இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பில் அரச குடும்பத்தை உலுக்கும் செய்தி வெளியானதும், அதன் அடுத்த ஆறு நாட்களில் அவர் அரச கடமைகளில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால் இளவரசர் ஹரி தொடர்பில் விவகாரம் பூதாகரமானதும், ராணியாரே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது, இளவரசர் ஹரி மீது அவர் வைத்திருக்கும் அளவில்லாத பாசம் என்றே கருதப்படுகிறது.

மேலும், இளவரசர் ஹரியின் முடிவு தொடர்பில் முன்னதாகவே ராணியாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையும் விவாதங்களும் மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Image: Getty Images)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...