கடமையிலிருந்து விலகினால் பத்து பைசா கூட கிடைக்காது: ஹரியை எச்சரித்த இளவரசர் சார்லஸ்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கடமையிலிருந்து விலகினால், இதுவரை செய்யப்பட்டது போல், இனி பணம் எதுவும் ஹரிக்கு கொடுக்கப்படாது என பிரித்தானிய இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜ கடமைகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக திட்டமிட்டுள்ள நிலையில், பிரித்தானிய இளவரசரும், ஹரியின் தந்தையுமான இளவரசர் சார்லஸ், தன் மகனுக்கு இதுவரை செய்துவந்த நிதியுதவியை நிறுத்தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார ரீதியில் தனித்து செயல்பட விரும்புவதாக இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் இந்த வாரம் அறிவித்துள்ள நிலையில், அவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ராஜ நிதியிலிருந்து பணம் பெறுவதை நிறுத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், இளவரசர் சார்லசுக்கு நெருக்கமான சிலர், இதுவரை ஹரிக்கு வழங்கிவந்த 2.3 மில்லியன் பவுண்டுகளை நிறுத்தப்போவதாக சார்லஸ் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

ஹரி மேகன் தம்பதியின் திட்டம் மகாராணியாரை கடுமையான ஏமாற்றமடையச் செய்துள்ளதாகவும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பொதுமக்களில் மூன்றில் இரண்டு பாகம் பேர், ஹரி தம்பதி இனி ராஜ நிதியிலிருந்து உதவி பெறக்கூடாது என தெரிவித்திருந்ததைத் தொடர்ந்தே, இனி ஹரிக்கு உதவப்போவதில்லை என சார்லஸ் முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த இளவரசர் சார்லசுக்கு நெருக்கமான ஒருவர், இனி தனது மகனுக்கு வெற்றுக் காசோலைகளை வழங்கப்போவதில்லை என்பதை இளவரசர் சார்லஸ் உறுதிபட தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...