ஈரானின் ரகசிய நகர்வு... தூதரகங்களுக்கு உச்ச பாதுகாப்பு: பிரித்தானியா எடுத்த முக்கிய முடிவு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்திருந்தாலும், போருக்கான வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நிபுணர்களின் குறித்த எச்சரிக்கை காரணமாக ஈரான் பிராந்தியத்தில் உள்ள மொத்த பிரித்தானியர்களையும் அங்கிருந்து வெளியேற்ற பிரித்தானியா முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக லெபனான் வழியாக 7,000 பிரித்தானியர்களை திரும்ப அழைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

ஈரானிய துருப்புகள் நேரடியாக தாக்குதலில் ஈடுபடாமல் இருந்தாலும், மறைமுக தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு அதிகம் எனவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், ஈரானிய குத்ஸ் படைகளின் பலம் அறிந்தபடியால், உலக அளவில் தூதரகங்கள் அனைத்தும் உச்ச பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஈரானை பொறுத்தமட்டில் உள்ளூர் துபுக்கள் மட்டுமல்ல, மொத்த ஆசியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு குழுக்களும் தென் அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரான் ஆதரவு பெற்ற மறைமுக தாக்குதலில் ஈடுபடும் குழுக்கள் அனைத்தும் பலம் வாந்தவை எனவும்,

மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் இவர்கள் வியாபித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

லெபனான் நாடு பதற்றம் மிகுந்து காணப்படுவதாகவும், ஈரான் தங்கள் ஆதரவு குழுக்களை தூண்டி விட்டு, மறைமுக தாக்குதலை முன்னெடுக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானங்கள், கப்பல்கள் உள்ளிட்டவையில் பிரித்தானியர்களை ஈரானில் இருந்து வெளியேற்ற தற்போது திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...