கொல்லப்பட்ட சுலைமானியின் கைகளில் பிரித்தானிய வீரர்களின் இரத்தக்கறை - போரிஸ் ஜான்சன்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதி குவாசிம் சுலைமானியின் கைகளில் பிரித்தானிய இராணுவ வீரர்களின் இரத்தக்கறை படிந்திருந்ததாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதால், அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் பதட்டத்தில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய ஆதரவை வாஷிங்டன் பக்கத்திற்கு அளித்துள்ளார்.

புதன்கிழமை வாராந்திர ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அமர்வில் பேசிய போரிஸ், அண்மையில் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புதன்கிழமை அதிகாலை ஈராக்கில் உள்ள இராணுவத் தளங்களைத் ஈரான் தாக்கியது.

இந்த தாக்குதல்களில் பிரித்தானிய ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என்றும், பிராந்தியத்தில் அதன் நலன்களைப் பாதுகாக்க பிரித்தானிய "முடிந்த அனைத்தையும்" செய்து வருவதாகவும் ஜான்சன் கூறினார்.

இராணுவ தளங்கள் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் "பொறுப்பற்றவை மற்றும் ஆபத்தானவை" எனக்கூறிய அவர், உடனடியாக பதட்டங்களை குறைப்பதற்கான அழைப்பை விடுத்தார்.

"ஈரான் இந்த பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான தாக்குதல்களை மீண்டும் செய்யக்கூடாது, மாறாக பதட்டங்களை குறைப்பதற்கான வேலைகளை தொடர வேண்டும்" என நாடாளுமன்றத்தில் பேசினார்.

மேலும், யேமனின் ஈரானுடன் இணைந்த ஹவ்தி இயக்கம் மற்றும் ஹெஸ்பொல்லாவை ஆயுதபாணியாக்குவதில் சுலைமானி ஈடுபட்டதாக ஜான்சன் குற்றம் சாட்டினார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை சுலைமானி ஆதரித்ததாகவும், பிரித்தானிய துருப்புக்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததாகவும் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...