ஈரானிய விமான விபத்து... கொல்லப்பட்ட 174 பயணிகளில் பிரித்தானிய புதுமண தம்பதி!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஈரான் தலைநகரில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமானத்தில் கொல்லப்பட்ட 174 பயணிகளில் பிரித்தானிய புதுமண தம்பதியும் இருந்துள்ளதாக உலுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமானத்தில் 3 பிரித்தானியர்கள் பயணம் மேற்கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில்,

தற்போது கொல்லப்பட்ட பிரித்தானியர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் Saeed Tahmasebi Khademasadi என்பவரே தமது இளம் மனைவியுடன் விமான விபத்தில் சிக்கியவர்.

ஈரானை பிறப்பிடமாக கொண்ட 35 வயதான Khademasadi பொறியாளர் எனவும், இவரது மனைவி ஈரானை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

திருமண வாழ்க்கையை துவங்கும் முன்னரே இந்த கோர முடிவு இருவரையும் காவுகொண்டுள்ளது.

Tahmasebi's wife Niloofar Ebrahim

எசெக்ஸ் பகுதியில் தமது சகோதரியுடன் குடியிருக்கும் Khademasadi கடந்த 15 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்திலேயே இவருக்கு ஈரானிய பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது புதுமண தம்பதிகளுக்கான சடங்கு ஒன்று இருப்பதால் இருவரும் ஈரான் சென்றுள்ளனர்.

வாழ்க்கையை துவங்கும் முன்னரே மரணத்தைத் தழுவிய இந்த இளம் தம்பதிகளின் விவகாரம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

Tahmasebi

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...