ஈரான் விமான விபத்தில் 176 பேருடன் உயிரிழந்த பிரித்தானியர்! வெளியான புகைப்படம்: பெற்றோர் கண்ணீர்

Report Print Santhan in பிரித்தானியா

ஈரானில் 176 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்தில், பிரித்தானியர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், பிரித்தானியார் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் Imam Khomeini சர்வதேச விமானநிலையத்தில் இருந்து உக்ரைன் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விமான ஊழியர்கள் உட்பட 176 பேருடன் இன்று புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே திடீரென்று தொழில் நுட்ப கோளாறு காரணமாக எரிந்த நிலையில் கீழே விழுந்தது. இதனால் விமானத்தில் இருந்த 176 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

விமானத்தில் இருக்கும் இன்ஜினில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானம் எரிந்து கீழே விழுந்துவிட்டதாகவும், விமானத்தின் கருப்பு பெட்டியில் இருக்கும் தகவலை வைத்தே என்ன நடந்தது என்பதை கூற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான விபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் ஒருவரின் பெயர் Mohammad Reza Kadkhoda-Zadeh எனவும் 40 வயதான இவர் East Sussex-ஐ சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மெயில் வெளியிட்டிருக்கும் செய்தியில், Mohammad Reza Kadkhoda-Zadeh கிறிஸ்துமஸ் தினத்தில் குடும்பத்தினரை பார்க்க ஈரான் சென்ற இவர், உக்ரைன் வழியாக பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்.

Dry cleaning தொழில் செய்து வரும் இவர், East Sussex-ல் இருக்கும் Brighton-ல் வசித்து வந்துள்ளார். இவருக்கு 9 வயது மகள் இருப்பதாகவும், மனைவியுடன் விவகாரத்தாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது,

இவரின் பெற்றோர் Haywards Heath-ல் வசித்து வருகின்றனர். Mohammad Reza Kadkhoda-Zadeh-ன் தந்தையான Mahmoud(67)-யிடம் கேட்ட போது, அவரால் பேச முடியவில்லை, என்னால் பேச முடியாது மன்னித்துவிடுங்கள் என்று மகனை இழந்த துக்கத்தில் கண்கலங்கினார்.

குடும்ப நண்பர் கூறுகையில், அவன் பெற்றோருக்கு ஒரே ஒரு மகன், அமைதியாக இருப்பான், நன்றாக தொழில் செய்து வருவான். இப்ப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்