நோயாளிகள் முன் நர்ஸ்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட மருத்துவர்: சிறைக்கு தப்பினார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நோயாளிகள் முன்னாலேயே நர்ஸ்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட மருத்துவர் ஒருவர், சிறை செல்வதிலிருந்து தப்பியுள்ளார்.

லிவர்பூலைச் சேர்ந்த மூத்த மருத்துவர் விஜய் மகேந்திரன் (53).

அவர் மீது இரண்டு நர்ஸ்களை தவறாக தொட்டதுடன், உயிர் போகும் நிலையிலிருந்த ஒரு நோயாளியின் கண் முன்னாலேயே மோசமாக நடந்துகொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது, மகேந்திரன் தனது சக மருத்துவர்களாகிய இரண்டு பெண்களின் பின் பக்கங்களை தவறாக பிடித்து மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்.

அத்துடன் ஒரு நர்ஸிடம் ஆறு முறையும் மற்றொரு நர்ஸிடம் ஒரு முறையும் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, உங்கள் பர்சனாலிட்டியில் இரண்டு விதம் உள்ளது, நீங்கள் யாரை மதிக்கிறீர்களோ அவர்களிடம் மரியாதையாகவும், யாரிடம் உங்களுக்கு மரியாதை இல்லையோ அவர்களை கேவலமாகவும் நடத்தியுள்ளீர்கள் என்றார்.

மகேந்திரனுக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றாலும், அது suspended sentence ஆக வழங்கப்பட்டுள்ளதால், அவர் இப்போதைக்கு சிறைக்கு செல்லவேண்டியதில்லை.

ஆனால், பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...