ஈரானின் அதிரடி ஏவுகணை தாக்குதல்: 200 பயணிகளுடன் நூலிழையில் தப்பிய பிரித்தானிய விமானம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தொடுத்த ஏவுகணை தாக்குதலில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று நூலிழையில் தப்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரில் இருந்து லண்டன் நோக்கி சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, ஈராக் வான்பரப்பைல் நுழையும் முன்னர் அதிரடியாக வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அமெரிக்க துருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் தொடுப்பதற்கு சில நிமிடங்கள் முன்னரே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது.

ஈராக் வான்பரப்பில் குறித்த விமானம் நுழையாமல், அங்கிருந்து சவுதி அரேபியா வான்பரப்பு வழியாக எகிப்து பின்னர் கிரேக்க தலைநகர் ஏதென்ஸ் நகருக்கு திருப்பி விடப்பட்டது.

இதனால் 200 பயணிகள் கொண்ட அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், விமானியின் சமயோசித முடிவால் நூலிழையில் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மட்டுமின்றி, பல்வேறு சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விமானங்களை தற்போது ஈரான் மற்றும் ஈராக் வான்பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனுக்கும் குவைத்துக்கும் இடையிலான விமானங்களும் ஈராக்கைச் சுற்றிலும் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் திடீரென்று ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் சில மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதனிடையே ஏதென்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமான பயணிகள் சிலர் இந்திய கடவுச்சீட்டு வைத்திருந்தமையால், விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களோ, விமான நிலைய ஊழியர்களோ எவரும் உதவிக்கு இல்லை எனவும் சில பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers