அமெரிக்கா-ஈரான் மோதலில் புதிதாக உள்ளே புகுந்த நாடு... யாருக்கு ஆதரவு தெரியுமா? முற்றும் போர் பதற்றம்

Report Print Santhan in பிரித்தானியா

ஈரான் அமெரிக்கா படைகளை தாக்கியது, தவறு என்று பிரித்தானியா தெரிவித்துள்ளதால், தற்போது ஈரான், பிரித்தானியாவிற்கிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

குவாசிம் சுலைமானி மரணத்திற்கு பின் இன்று அதிகாலை, ஈரான், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவதளங்கள் மீது நடத்திய தாக்குதலால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே நடக்கும் இந்த மோதலில், தற்போது பிரித்தானியா உள்ளே நுழைந்துள்ளது. பிரித்தானியா அமெரிக்க படைகளை ஈரான் தாக்கியது தவறு என்று அமெரிக்காவிற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது.

தற்போது பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன், பிரித்தானியா ஐரோப்பா யூனியனில் இருந்து வெளியே வரும் முயற்சியில் இறங்கி வருகிறார்.

இதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் திட்டத்தில் அவர் இருக்கிறார். இதன் வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெல்லவும் வாய்ப்புள்ளது. இதனால் மிக விரைவில் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிவிடும் என்று கூறப்படுகிறது.

அப்படி பிரித்தானியா வெளியேறினால் கண்டிப்பாக பொருளாதார நெருக்கடி ஏற்படும், இதனால் கண்டிப்பாக பிரித்தானியா போருக்கு செல்ல வாய்ப்பில்லை, போரைப் பற்றி போரிஸ் நினைக்கமாட்டார், அது பொருளாதாரத்தில் எந்தளவிற்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதை அவர் அறிந்திருப்பார்.

© Chris Furlong/Getty

இதன் வெளிப்பாடாகவே யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரித்தானியா, ஈரானை கண்டித்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறு. ஈரான் இப்படி செய்திருக்க கூடாது. ஈரானை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மேலும் குவாசிம், கொலையில் பிரித்தானியாவுக்கும் தொடர்பு இருக்கிறது. பிரித்தானியா அமெரிக்காவின் கையாள். அவர்களின் கையிலும் ரத்தக்கறை இருக்கிறது. பிரித்தானியாவும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று ஈரான் கடுமையாக கண்டித்து இருக்கிறது.

[Vahid Salemi/AP Photo]

இதனால் ஈரான்-பிரிட்டன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரானை சமாளிக்கும் விதமாக ஈராக்கிற்கு பிரித்தானியா தனது படைகளை அனுப்ப உள்ளது.

ஈரான் தாக்குதல் நடத்தினால் பிரிட்டன் உடனே திருப்பி தாக்கும். பிரிட்டனின் இரண்டு போர் கப்பல்கள், இரண்டு போர் விமானங்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், 400 வீரர்கள் முதற்கட்டமாக ஈராக் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers