இங்கிலாந்துக்கு சாவு-இஸ்ரேலுக்கு மரணம்! அமெரிக்காவிக்கு கொடுத்த பதிலடிக்கு பின் ஈரானின் எச்சரிக்கை வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடந்தது குறித்து மக்களிடம் கூற, உடனே அங்கிருந்தவர்கள் இங்கிலாந்திற்கு மரணம் மற்றும் இஸ்ரேலுக்கு மரணம் என்று கோஷமிட்ட வீடியோ வெளியாகி பார்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக ஈராக்கின் அல் அசாத் மற்றும் எர்பி பகுதியில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் 80 அமெரிக்க தீவிரவாதிகள் பலியாகியிருப்பதாக, ஈரானில் இருக்கும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவோ எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலை மக்கள் கூடியிருக்கும் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் அல் அசாத் தளம் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு பல ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.

இதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட, அதற்கு அவர் மீண்டும் எர்பியில் இருக்கும் தளமும் அதே நேரத்தில் தாக்கப்பட்டது என்று கூற, உடனே அங்கிருந்த மக்கள் இங்கிலாந்திற்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் என்று கோஷமிட்டனர்.

இதற்கு குவாசிம் சுலைமானின் இறுதி ஊர்வலத்தின் போது, ஈரானிய மக்கள் அமெரிக்காவிற்கு மரணம் என்று கோஷமிட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது இவர்கள் இங்கிலாந்திற்கு மரணம் மக்கள் கோஷமிடும் வீடியோ வெளியாகி உலகநாடுகள் மத்தியில் கவனிப்பை பெற்றுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்