வளைகுடா பகுதியில் தயார் நிலையில் பிரித்தானிய படைகள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஈராக்கிலிருக்கும் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரித்தானியா தனது ராணுவத்தை வளைகுடா பகுதியில் தயாராக நிறுத்தியுள்ளது.

பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் சமாளிக்கும் வகையில், இரட்டை இயந்திர சினூக் ஹெலிகொப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்னொரு வகையில் சொல்லப்போனால், ஈராக்கில் நிலவரம் மோசமடைந்தால் பிரித்தானிய படைகளை உடனே அங்கிருந்து வெளியேற்ற இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படலாம்.

அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் வெளியானதுமே, பிரித்தானிய போர்க்கப்பல்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈராக்கில் அல்லது ஈராக்குக்கு அருகில் நிறுத்தப்படுவதற்காக தயாரானதாக தகவல் வெளியானது.

அதே நேரத்தில் பிரித்தானிய மக்களோ, அல்லது வீரர்கள் யாராவதோ தாக்கப்பட்டால் சரியான விதத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்றார் பிரித்தானிய பாதுகாப்புத்துறைச் செயலர் பென் வாலேஸ்.

ஏற்கனவே ஈராக்கில் 400 பிரித்தானிய வீரர்கள் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...