கூட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொய் புகார் தெரிவித்த இளம்பெண் வழக்கில் அதிரடி திருப்பம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சைப்ரஸ் தீவில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொய் புகார் கூறியிருந்த பிரித்தானிய இளம்பெண்ணுக்கு பிரித்தானியாவுக்கு திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறையிலடைக்கப்பட இருந்ததுடன், 1,500 பவுண்டுகள் அபராதமும் செலுத்த வேண்டி வந்திருக்கலாம்.

ஆனால், இன்று Famagusta மாகாண நீதிமன்றம் அவரை விடுவித்ததுடன், அவரது பாஸ்போர்ட்டையும் திரும்பக் கொடுத்துள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்த 19 வயது பெண்ணுக்கு தீர்ப்பளித்த நீதிபதி Michelins Papathanasiou, அந்த பெண்ணுக்கு ஒரு இரண்டாவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்.

எனவே இப்போது அந்த பெண் சிறையில் அடைக்கப்படாமல் பிரித்தானியா திரும்ப முடியும், ஆனால் அவர் குற்றவாளி என ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை.

சைப்ரஸ் தீவில், கால் பந்தாட்ட வீரரான தனது காதலன் தன்னைப் பிடித்து வைத்திருக்க, 12 இஸ்ரேல் நாட்டு இளைஞர்கள் தன்னை வன்புணர்வு செய்ததாக அந்த பெண் புகாரளித்திருந்தார்.

இறுதியில் அவர் சொன்னது பொய் என்று நீதிமன்றத்துக்கு தெரியவரவே, அவர் ஓராண்டு சிறை செல்லவேண்டிய சூழல் உருவானது.

தற்போது அவர் பிரித்தானியா திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றாலும், அவருக்கு நான்கு மாத suspended sentence கொடுக்கப்பட்டுள்ளதால், குற்றப்பின்னணி கொண்டவராக அவர் கண்காணிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...