பிரித்தானிய ராணுவத்திற்கு ஈரான் எச்சரிக்கை எதிரொலி: பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர ஆலோசனை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அமெரிக்கா தங்கள் தளபதியைக் கொன்றதற்கு பழி வாங்கும் விதத்தில் தாக்குதல் நடத்தும்போது, பிரித்தானிய படையினரும் தாக்கப்பட வாய்ப்புள்ளது என ஈரான் எச்சரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைக்க தன்னாலான மட்டும் முயற்சி செய்துவந்தார்.

ஆனாலும் அமெரிக்கப்படைகளைத் தாக்கும்போது பிரித்தானிய படையினரும் தாக்கப்பட வாய்ப்புள்ளது என ஈரான் எச்சரித்தது.

எனவே, இன்று நடந்த கேபினட் கூட்டத்தில் இந்த விடயம்தான் முக்கியத்துவம் வகித்தது.

போரிஸ் ஜான்சன் அமைச்சர்களுடன் இது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்திவரும் நிலையில், ஈராக்கிலுள்ள பிரித்தானிய படைகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, பிரித்தானிய படைகளை அங்கிருந்து வெளியேற்றும் திட்டமும் தயாராகி வருவதாக பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து பிரதமர் பாதுகாப்புப்படைத் தலைவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈராக் நாடாளுமன்றம் வெளிநாட்டுப்படைகள் வெளியேறவேண்டும் என வற்புறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, ராணுவத்தினர் மட்டுமல்லாது பிரித்தானிய குடிமக்களையும் ஈராக்கிலிருந்து வெளியேற்ற வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...