டால்கம் பவுடரை அள்ளித் தின்னும் பிரித்தானிய தாயார்: அவருக்கு மிகவும் பிடித்த பவுடர் எது தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தாயார் ஒருவர் நாள் ஒன்றுக்கு 200 கிராம் டால்கம் பவுடரை தின்று தீர்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் டேவன் பகுதியில் குடியிருக்கும் 44 வயதான லிசா ஆண்டர்சன் என்பவரே இந்த விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக லிசா ஆண்டர்சன் சுமார் 8,000 பவுண்டுகள் தொகையை டால்கம் பவுடர் சாப்பிடுவதற்காகவே செலவிட்டுள்ளார்.

5 பிள்ளைகளுக்கு தாயாரான லிசா 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் டால்கம் பவுடர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மட்டுமின்றி இரவு தூக்கத்திலும் பவுடர் சாப்பிடுவதற்காகவே பலமுறை கண்விழிப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் வாரம் 10 பவுண்டுகள் வரை லிசா செலவிடுகிறார். தமக்கு மிகவும் பிடித்த டால்கம் பவுடர் குழந்தைகளுக்கான ஜான்சன்ஸ் பவுடர் என கூறும் லிசா,

சுமார் பத்தாண்டுகள் தமது இந்த விசித்திர பழக்கத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும்,

ஆனால் இரவில் தாம் குளியலறை சென்று பவுடர் சாப்பிடுவது தமது கணவரிடம் ஒருநாள் அம்பலமானது எனவும் அதன் பிறகே வெளியுலகிற்கு இது தெரியவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நிபுணர்களின் உதவியை நாடிய லிசாவுக்கு, உணவல்லாத பொருட்கள் மீதான ஈர்ப்பு தொடர்பான நோய் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

டால்கம் பவுடரை அளவுக்கு அதிகமாக சுவாசிப்பதோ அல்லது உண்பதோ உடம்பிற்கு தீங்கு என குறிப்பிடும் நிலையில், லிசாவுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்