48 ஆண்களை வன்புணர்வு செய்து படமெடுத்த சைக்கோ.. பிரித்தானியாவை அதிர வைத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் 48 ஆண்களை வன்புணர்வு செய்த சைக்கோவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவன் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மான்செஸ்டர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

159 பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்ற 36 வயதான சினாகா, பிரித்தானியாவின் மிக மோசமான சீரியல் ரேபிஸ்ட் என கூறப்படுகிறது.

மான்செஸ்டரில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பிரின்ஸஸ் வீதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சினாகா, அருகில் உள்ள கிளப்புகளுக்கு வெளியே போதையில் இருந்த தனிநபர்களை குறிவைத்துள்ளார்.

சுமார் 48 பேரை கவர்ந்து அவரது அறைக்கு அழைத்துச் சென்ற சினாகா, பின்னர் அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு செய்து அதை படமெடுத்துள்ளார்.

குறைந்தது 190 பேர் சினாகாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். மேலும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த முதுகலை மாணவரான சினாகா, 2018ல் ஏற்கனவே இரண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அக்குற்றங்களுக்காக குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று அனுபவித்து வருகிறார்.

2017ல் சினாகாவிடமிருந்து தப்பிய நபர் ஒருவர் பொலிசில் அளித்த புகாரை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜனவரி 2015 முதல் ஜூன் 2017 வரை சினாகா இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார், ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே குற்றச்செயலை தொடங்கினார் என்று பொலிசார் நம்புகிறார்கள்.

dailystar

கைது செய்யப்பட்ட பிறகு சினாகாவிற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எச்ஐவி நெகடிவ் என கண்டறியப்பட்டுள்ளது.

சினாகாவின் விசாரணைகள் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் 18 மாதங்களில் நடந்தன, இதன் விளைவாக அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ஒருமனதாக குற்றவாளி என தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட 70 பேரை அடையாளம் காண முடியவில்லை என்றும், சினாகாவால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பும் நபர்கள் முன்வருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குற்றச்சாட்டுகளை மறுத்த சினாகா, அனைத்து பாலியல் நடவடிக்கைகளும் இணக்கதுடன் நடந்தது என்றும், ஒவ்வொரு நபரும் படமாக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்