நமக்கு தெரியாமல் நம்மிடையே வாழும் ஏலியன்கள்: பிரித்தானிய விண்வெளி வீராங்கனை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஏலியன்கள் இருக்கத்தான் செய்கின்றன, அவை நம்மிடையே கூட வாழ்ந்துகொண்டிருக்கலாம் யாருக்குத் தெரியும் என்கிறார் விண்வெளிக்குச் சென்ற பிரித்தானியாவின் முதல் விண்வெளி வீராங்கனை.

28 ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்குச் சென்ற Dr Helen Sharman, பிரபஞ்சத்தில் எல்லா வகை உயிரினங்களும் வாழத்தான் செய்கின்றன என்று கூறுவதுடன், நம்மால் அவற்றைப் பார்க்கமுடியவில்லை, அவ்வளவுதான் என்கிறார்.

ஏலியன்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறும் Dr Sharman, அதைக்குறித்து சந்தேகமேயில்லை, பிரபஞ்சத்தில் பல மில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன, அப்படியானால் அங்கு எல்லாவகை உயிரினங்களும் இருக்கத்தான் வேண்டும் என்கிறார்.

Helen Sharman became the first Briton in space in 1991

அவை உங்களைப்போலவோ என்னைப்போலவோ கார்பனாலும் நைட்ரஜனாலும் ஆக்கப்பட்டுள்ளனவா என்றால், ஒருவேளை அப்படி இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், அவை நம்மிடையே கூட இருக்கலாம், நம்மால் அவற்றைப் பார்க்க முடியவில்லை அவ்வளவுதான் என்கிறார் அவர்.

1991ஆம் ஆண்டு முதன் முதலில் விண்வெளிக்கு சென்று எட்டு நாட்கள் இருந்தவர் என்ற பெருமையைப் பெற்ற Dr Sharmanஐ, 2015ஆம் ஆண்டு Tim Peake என்பவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றபின் அனைவரும் மறந்துபோனார்கள்.

தற்போது அதை நினைவு படுத்தும் Dr Sharman, ஏலியன்கள் குறித்து பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

PA

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்