சுலைமானிக்காக பழி வாங்க பிரித்தானிய வீரர்களை கொல்வோம்: ஈரான் மிரட்டலுக்கு ராணுவ அதிகாரியின் விளக்கம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி வாங்க பிரித்தானிய வீரர்களை கொல்வோம் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைக் கொல்வதை விட பிரித்தானிய வீரர்களைக் கொல்வது எளிது என முன்னாள் பிரித்தானிய கடற்படை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தளபதி சுலைமான் சென்ற வாரம் அமெரிக்க வான்வெளித்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக பிரித்தானிய ராணுவ வீரர்களைக் கொல்லப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவரான Lord West of Spithead என்பவர், ஈரான் பழிக்குப்பழி வாங்கும் பட்சத்தில், அமெரிக்க ராணுவ வீரர்களை தாக்குவதைவிட பிரித்தானிய வீரர்களை தாக்குவது ஈரானுக்கு எளிது என்று கூறியுள்ளார்.

ஈரானின் குத்ஸ் படையின் மூத்த தளபதி ஒருவர், தாக்குதலின்போது பிரித்தானிய வீரர்களும் பலியாகலாம் என்று கூறியுள்ளார்.

நாங்கள் பழிவாங்குவதற்காக அமெரிக்க படைகளைத் தாக்கும்போது, பிரித்தானியர்கள் உட்பட அவர்களது கூட்டுப்படையில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் தாக்குவோம்.

அப்படித் தாக்கும்போது அதன் விளைவாக யார் வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஆகவே, சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதத்தில், ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் எடுக்கும்போது, அவர்களைத் தாக்கும்போது அவர்களுடன் நிற்கும் நீங்களும் பலியாகாமல் தப்ப வேண்டுமானால், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான பிரித்தானியா மற்றும் NATO உட்பட மற்ற மேற்கத்திய கூட்டாளிகள், ட்ரம்ப் படையுடன் நிற்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்