3 ஆம் உலகப் போர் வெடித்தால்... பிரித்தானியா போரில் ஈடுபடுமா? வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் 3ம் உலகப் போர் வெடித்தால் பிரித்தானியா அதில் ஈடுப்படுமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

3 ஆம் உலகப் போர் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் தளபதி சுலைமானி கொல்லப்பட்டது மற்றொரு உலகப் போரின் தூண்டுதல் நிகழ்வாக மாறியது குறித்து பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததை அடுத்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் 2018 முதல் அதிகரித்து வருகிறது.

ஈரானிய அரசாங்க இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனாதிபதி ஹசன் ரூஹானி கூறியதாவது, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பிற சுதந்திர நாடுகளும் இந்த கொடூரமான குற்றத்திற்காக குற்றவாளி அமெரிக்காவை பழிவாங்கும் என்று கூறினார்..

ஆனால், எந்த நாடுகளும் இதுவரை மற்றொரு நாட்டுக்கு எதிராக போரை அறிவிக்கவில்லை.

முன்னதாக, பிரித்தானியா இரு உலகப் போர்களிலும் ஈடுபட்டுள்ளது, மேலும் பிரித்தானியா மற்றொரு உலகப் போரில் ஈடுபடுமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த சாத்தியமில்லை.

ஈரானுடனான இங்கிலாந்தின் வரலாற்று பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, அந்த நாடு யுத்தத்தை அறிவித்தால், தனது நட்பு நாடான அமெரிக்காவுக்கு பிரித்தானியா ஆதரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு முக்கிய நாடுகளிடையே சண்டை பரவலாகிவிட்டால் மட்டுமே உலகப் போர் 3 நிகழும். உலகெங்கிலும் உள்ள குறிப்பிடத்தக்க நாடுகளை உள்ளடக்கிய போரே உலகப் போராக வரையறுக்கப்படுகிறது.

அத்தகைய மோதலில் ரஷ்யா மற்றும் சீனா போன்று முக்கிய நாடுகள் ஈடுபடக்கூடும்.

இந்த நாடுகள் தற்போது அமெரிக்கா-ஈரான் பிரசினையில் தலையிடவில்லை. எனவே தற்போதைய அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் 3 ஆம் உலகப் போராக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தற்போது நம்பவில்லை.

ஈரான் அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அதன் தாக்கமே 3 ஆம் உலகப் போரின் சாத்தியத்தை தீர்மானிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்