ஈரான் தளபதி குவாசிம் அமெரிக்காவால் கொலை செய்யப்பட்டது சரியா? பிரித்தானியாவின் பதில் இது தான்

Report Print Santhan in பிரித்தானியா

ஈரான் தளபதி குவாசிம் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் புலம்பமாட்டோம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா சமீபத்தில் ஈரான் தளப்டஹி குவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொலை செய்த சம்பவம், ஈரான்-அமெரிக்கா மட்டுமின்றி, உலகநாடுகளுக்கிடையே ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இரண்டு நாடுகளுமே பொறுமையாக இருக்க வேண்டும் என்று சீனா, உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதே சமயம் இஸ்ரேல், அமெரிக்காவின் இந்த செயல் நல்லது தான் என்று ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து புலம்பமாட்டேன் என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், குவாசிம் அனைத்து வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். பிராந்தியத்தில் நிலைமையை சீர்குலைததும் அவர் தான், ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் மரணத்திற்கு வழி வகுத்தற்கான முக்கிய பங்கு அவருக்கும் உள்ளது என்பதால், அவரின் மரணம் குறித்து புலம்பமாட்டோம்.

இருப்பினும் பதிலடி, பழிவாங்க என்பது மிகப் பெரிய வன்முறைக்கு வழி வகுக்கும், இது குறித்து நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் போரிஸ் ஜான்சன, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுடன் பேசியதாகவும், இதைத் தொடர்ந்து அவர் மற்ற தலைவர்களுடனும் பேச முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்