இரண்டு போர்கப்பல்களை வளைகுடாவிற்கு அனுப்பிய பிரித்தானியா

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பொதுமக்கள் மற்றும் கப்பல்களை பாதுகாப்பதற்காக பிரித்தானியா இரண்டு போர்க்கப்பல்களை பாரசீக வளைகுடாவிற்கு அனுப்பியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பெரும் பதட்டங்களுக்கு மத்தியில், பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், எச்.எம்.எஸ் மாண்ட்ரோஸ் மற்றும் எச்.எம்.எஸ் டிஃபென்டர் என்கிற இரண்டு போர் கப்பலைகளை பாரசீக வளைகுடாவிற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்கள் ஆபத்தான பகுதி வழியாக பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்காக ஹார்முஸ் ஜலசந்திக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

"இந்த நேரத்தில் எங்கள் கப்பல்களையும் குடிமக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்" என்று பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தனது முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் புரட்சிகர காவலர்களின் உயரடுக்கு சிறப்புப் படையின் தளபதியான ஈரானிய இராணுவ தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்ற பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாளை, போரிஸ் ஜான்சன் மஸ்டிக்கில் தனது விடுமுறையிலிருந்து பிரித்தானியாவிற்கு திரும்ப உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏனெனில் அவர் இதுவரை தனது பிரதமராக இருந்த இராஜதந்திரத்தின், மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள உள்ளார்.

வான்வழித் தாக்குதல் தொடர்பாக பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்க் செட்வில் வரவேற்க உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers