இளம்பெண்ணை ஆபாசமாக நடந்துகொள்ள வற்புறுத்திய உபேர் சாரதி: சாதுரியமாக சிக்கவைத்த இளம்பெண்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இளம்பெண் ஒருவரை வேண்டுமென்றே சுற்று வழியில் அழைத்துச் சென்ற ஒரு உபேர் டாக்சியின் சாரதி, அவரை தன்னிடம் ஆபாசமாக நடந்துகொள்ள வற்புறுத்த, சாதுரியமாக வரை சிக்கவைத்துள்ளார் அந்த இளம்பெண்.

பாகிஸ்தானியரான Nadeem Afzal (51) லண்டனில் தனது டாக்சியில் ஏறிய 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார்.

டாக்சியில் செல்லும்போதே உடைகளைந்த அவர் தனது அந்தரங்க உறுப்பை அந்த பெண்ணிடம் காட்டி தன்னை ஆபாசமாக தொடுமாறு வற்புறுத்தியுள்ளார்.

மறுத்துக்கொண்டே வந்த அந்த இளம்பெண், அதே நேரத்தில் Afzal பேசுவதை அவருக்கு தெரியாமல் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார்.

40 நிமிடங்களில் முடியவேண்டிய பயணத்தை இழுத்தடித்து சுற்று வழியாக வந்து, அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள எவ்வளவோ முயன்றுள்ளார் Afzal.

பின்னர் அவரது வீட்டுக்கு சற்று தள்ளி அந்த பெண்ணை Afzal இறக்கிவிட, உடனே பொலிசாரை அழைத்த அந்த இளம்பெண் ஆதாரத்தையும் கொடுத்துள்ளார்.

Afzalஐக் கைது செய்துள்ள பொலிசார், அவருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதோடு, அவரது பெயரையும் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ளனர்.

இனி அவர் டாக்சி ஓட்டவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers