பிரித்தானியர்களுக்கு ... தளபதி சுவாசிம் கொலையால் வெளியுறவு அலுவலத்தின் முக்கிய அறிவுப்பு

Report Print Santhan in பிரித்தானியா

அமெரிக்காவால் ஈரான் தளபதி குவாசிம் சுலைமான் கொலை செய்யப்பட்டதான் காரணமாக, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால், பிரிட்டனின் வெளியுறவு அலுவலகம் தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா திடீரென்று நேற்று காலை நடத்திய ஆளில்லா ஏவுகணை தாக்குதலால் ஈரான் தளபதி குவாசிம் சுலைமான் கொலை செய்யப்பட்டார்.

இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக குறிந்த பிராந்தியங்களை விட்டு வெளியேறும் படி அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் ஈரான் மற்றும் ஈராக்கிற்கு செல்லும் பிரித்தானியா நாட்டினருக்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் குவாசிம் சுலைமான் கொல்லப்பட்ட சம்பவத்தினால் நாட்டின் எல்லைகளில் பதற்றம் நிலவியுள்ளது. இதனால் ஈராக் மற்றும் ஈரானின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிரித்தானியர்கள் பயணம் செய்ய வேண்டாம். அதே சமயம் முடிந்த அளவிற்கு பயணத்தை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • ஈரான்/ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 100 கி.மீற்றர்.
  • ஈரான் மற்றும் ஈராக் எல்லையில் இருந்து 10 கி.மீற்றர்.
  • Sistan and Baluchestan மாகாணம்
  • அதே போன்று Bam-வில் இருந்து Jask பகுதிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குவாசிம் சுலைமான் இறப்பை தொடர்ந்து அங்கு 3-ஆம் திகதி முதல் 6-ஆம் திகதி வரை துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி அவர் இறப்பு காரணமாக ஈரானில் உள்ள நகரங்களில் பேரணிகளும் அணிவகுப்புகளும் நடைபெறலாம்.

இதில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு, பிரித்தானியர்கள் பேரணிகள், அணிவகுப்புகள் அல்லது ஊர்வலங்களைத் தவிர்க்க வேண்டும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கேட்டு கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது

அதே சமயம் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள், பிரித்தானியா மற்றும் ஈரானிய இரட்டைப் குடியுரிமை பெற்றவர்கள் ஈரானில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்ற ஆபத்தும் உள்ளதாக கூறப்படுகிறது.

வெளியுறவு செயலாளர் Dominic Raab கூறுகையில், குறித்த பகுதிகளில் பதட்டம் அதிகரித்துள்ளதால், ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தைத் தவிர்த்து, ஈராக்கிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்றும், ஈரானுக்குப் பயணிப்பது அவசியமா என்பதை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கிருக்கும் பிரித்தானியர்கள் விழிப்புடன் இருங்கள் மற்றும் ஊடகங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும் வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers