திருடுவதற்காக காம்பவுண்டுக்குள் நுழைந்த திருடர்கள்: குப்பையில் கண்ட திகில் காட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

திருடுவதற்காக காம்பவுண்ட் ஒன்றிற்குள் நுழைந்த திருடர்கள் இருவருக்கு, பின்னர்தான் தெரியவந்தது தாங்கள் நுழைந்த இடம் மருத்துவக்கழிவுகள் கொட்டிவைக்கப்பட்டுள்ள இடம் என்பது.

அத்துடன் அங்கு அழுகிய நிலையில் உடல் பாகங்கள் வேறு கிடக்க, திகிலில் உறைந்துள்ளார்கள் அவர்கள்.

Barry Watson மற்றும் Jamie Pollard என்னும் திருடர்கள் இருவர் திருடுவதற்காக காம்பவுண்ட் ஒன்றிற்குள் நுழைந்த நிலையில், தாங்கள் நுழைந்த இடம் மருத்துவக்கழிவுகள் கொட்டிவைக்கப்பட்டுள்ள இடம் என்பது தெரியவந்துள்ளது.

அப்போது அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் அவர்களை துரத்த, அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்கள் அவர்கள்.

அங்கு நிறைய விலையுயர்ந்த மருந்துகள் இருப்பதை கவனித்த இருவரும் அடுத்த நாளும் திருடச் சென்றபோது சிக்கிக்கொண்டார்கள்.

அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தில் மருத்துவக் கழிவுகள் கிடப்பதை கண்டு, திருடியவர்கள் மீது நோய்க்கிருமிகள் ஏராளம் பரவியிருக்கும் என்பதால் மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பும் முன் அவர்களை கிருமி நீக்கம் செய்துள்ளார்கள்.

அந்த இடத்தில் செயல்பட்டு வந்த மருத்துவக் கழிவுகளை சேகரிக்கும் நிறுவனம் ஊழலில் சிக்கியதால் திவாலாகி அந்த கழிவுகளை அப்படியே போட்டுவிட்டதால், அதிலிருந்த உடல் பாகங்கள் அழுகிப்போய் கிடந்துள்ளது தெரியவதுள்ளது.

Watson மற்றும் Pollard இருவருக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், சமூக சேவை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers