மருத்துவர்கள் தவறால் மார்பகங்களை இழந்த பிரித்தானிய இளம்பெண்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் மருத்துவர்களின் தவறால் தனது இரண்டு மார்பகங்களையும் இழந்ததுள்ளார்.

2016ஆம் ஆண்டு, Sarah Boyle என்ற இளம்பெண் 25 வயதாக இருக்கும்போது, அவருக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், இளம் வயதில் தனது இரண்டு மார்பகங்களையும் இழந்ததோடு, அவர் கொடுமையான வேதனையை ஏற்படுத்தும் பல சுற்றுகள் கீமோதெரபி சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆனால், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம், Royal Stoke பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவரது புற்றுநோய் பரிசோதனையின் முடிவுகள் தவறானவை என்று கண்டுபிடித்தார்கள்.

அதாவது அவருக்கு புற்றுநோய் இல்லாத நிலையில், புற்றுநோய் இருப்பதாக தவறாக தெரிவிக்கப்பட்டதால் அவர் தனது மார்பகங்களை இழக்க நேரிட்டுள்ளது.

அத்துடன் செயற்கையாக அவருக்கு மார்பகங்களை பொருத்தும் அறுவை சிகிச்சை செய்தால், அதனால் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதால், அதையும் அவரால் செய்ய இயலவில்லை.

உடல் ரீதியாக தான் அனுபவித்த வேதனைகள் மட்டுமின்றி கடுமையான மன உளைச்சலுக்கும் தான் ஆளானதாக தெரிவிக்கிறார் Sarah.

இனி மேலாவது இத்தகைய தவறான முடிவுகளுக்கு வாய்ப்பில்லாத சிறந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள குரல் கொடுத்துள்ளார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...