ஈரான் தளபதி கொல்லப்பட்டதால் பிரித்தானிய படைகளுக்கு பெரிய ஆபத்து: முன்னாள் அமைச்சர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஈரான் தளபதி கொல்லப்பட்டதால் பிரித்தானிய படைகளுக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தளபதி ஒருவர் அமெரிக்க வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து ஈராக்கிலிருக்கும் பிரித்தானிய வீரர்களுக்கு அதிக ஆபத்து என வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றிய முன்னாள் அமைச்சரான Alistair Burt கூறியுள்ளார்.

பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகமும், ஈராக்கிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் முன்னணி பிரபலம் ஒருவர், மேற்கத்திய நாட்டவர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்புக்காக உடனடியாக ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ள நிலையில், முன்னாள் மத்திய கிழக்கு அமைச்சரான Alistair Burt, தளபதி காசிம் சுலைமானியை கொன்ற அமெரிக்க வான்வெளித் தாக்குதல் மிகவும் சீரியஸானது என்று தெரிவித்துள்ளார்.

Qassim Soleimani, the powerful head of Iran's Quds Force

அப்பகுதியில் முகாமிட்டிருக்கும் பிரித்தானிய படைகளுக்கு ஆபத்து ஏதாகிலும் உள்ளதா என்று அவரிடம் கேட்டதற்கு, அப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ள எந்த நடவடிக்கைக்கும் பின் விளைவுகள் இருக்கும் என்றும், அதனால், அப்பகுதியில் இருக்கும் ராணுவத்தினருக்கு ஆபத்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பை விட, இன்று காலை ஆபத்தும் பின் விளைவுகளும் அதிகமாகியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ள அவர், ஆனால் அமெரிக்காவைப் பொருத்தவரை, ஈரானியர்கள் எடுத்த நடவடிக்கைகளால் ஏற்கனவே தங்கள் வீரர்கள் ஆபத்தில் இருந்தார்கள் என்றுதான் சொல்லும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

ஆனால், அந்த பின் விளைவுகள் இந்த நடவடிக்கையால் எந்த அளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளன என்பதுதான் கேள்வி.

இந்த வான்வெளித் தாக்குதல் முரண்பாட்டை பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும், அதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பது தெரியாது என்றும் அவர் கூறினார்.

தற்போது, பாக்தாதுக்கு 40 மைல் தொலைவில் அமைந்துள்ள Taji முகாமில், சுமார் 500 பிரித்தானிய வீரர்கள் ஈராக் படையினருடன் பயிற்சி மற்றும் கற்றுக்கொடுக்கும் நோக்கத்திற்காக தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers