லண்டன் இரயிலில் குடி போதையில் மோசமாக நடந்த பயணி! முகம் சுளித்த பெண் பயணிகள்... வெளியான வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் இரயிலில் குடிபோதையில் ஏறிய பயணி கதவை குத்தியதுடன், சக பயணியுடன் கட்டி புரண்டு சண்டை போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் இரயில் பயணித்த 19 வயதான குயிண்டன் என்ற பயணி தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

அதில் குடிபோதையில் ஒரு நபர் தனது நண்பர்களுடன் இரயிலில் ஏறுகிறார்.

பின்னர் அங்குள்ள கதவை தனது கையால் அவர் குத்த, அங்கு பச்சை நிற சட்டை அணிந்த சக பயணி ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டு அவரை அடித்தார்.

இதையடுத்து கோபமடைந்த போதையில் இருந்த பயணி அந்த பயணியுடன் கீழே உருண்டபடி சண்டை போட்டார்.

இதோடு இருவரும் மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி கொள்ள பெண் பயணிகள் முகம் சுளித்தார்கள். மேலும் இருவரின் சண்டையை பார்த்த அனைத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தார்கள். பின்னர் இருவரையும் அவர்கள் விலக்கிவிட்டார்கள்

இதைபின்னர் பச்சை நிற ஆடை அணிந்திருந்த பயணி இரயிலை விட்டு இறங்கி சென்றார்.

ஆனால் போதையில் இருந்த நபர் இரயிலிலேயே இருந்தார்.

இது தொடர்பில் பொலிசார் கூறுகையில், இரயிலில் நடந்த சண்டை குறித்த வீடியோவை பார்த்தோம், அதில் சம்மந்தப்பட்டவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.

யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers