பிரெக்சிட்: இதுவரை வெளிவராத ஒரு கோணம்: இழப்பு பிரித்தானியாவுக்கு மட்டுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியா இம்மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற உள்ள நிலையில், இதுவரை பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு இழப்பு என்றே அனைவரும் கூறிவந்தனர்.

ஆனால், இழப்பு பிரித்தானியாவுக்கு மட்டும்தானா என்பதை விவாதிக்கிறது இக்கட்டுரை.

எல்லோரும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், பிரித்தானியாவுக்கு என்ன நடக்கும் என்று விவாதித்தார்களே ஒழிய, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என்ன ஆகும் என்பதைக் குறித்து யாருமே எதுவும் பேசவில்லை.

பிரெக்சிட் வேண்டாம், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருப்போம் என்று கூறியவர்கள் கூட, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்படும் இழப்பைக் குறித்து பேசவில்லை.

ஆனால் நிதர்சனமான உண்மை என்னவென்றால், ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் அந்த நாளில்தானே, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனிக்கு அடுத்து இரண்டாவது பெரிய பொருளாதார உறுப்பினராக இருக்கும் தனது உறுப்பினரை இழக்கும்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார உறுப்பு நாடு அதன் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்காது.

தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 13 சதவிகிதத்தையும் அது இழக்கும். தனது மூன்றாவது மிகப் பிரபலமான நாட்டையும், அதன் முக்கிய ராணுவ பலத்தையும், தனது தூதரக மற்றும் கலாச்சார தாக்கத்துக்கு குறிப்பிடத்தக்க அளவில் மூலக்காரணமாக இருக்கும் நாட்டையும் இழக்கும்.

மற்ற நாடுகளுக்கு நிதியுதவி செய்யும் நிதியில், இன்னொரு வகையில் சொல்லப்போனால், தனது மொத்த வருவாயில் பத்தில் ஒரு பாகமாகிய சுமார் 20 பில்லியன் யூரோக்களை இழக்கும்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையில் 12 சதவிகிதத்தையும், அதன் மிகப்பெரிய, மிகச்சிறந்த, தொடர்ந்து மாற்றத்துக்குட்படும் ஒரே நகரமாகிய லண்டனையும் அது இழக்கும்.

இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் கூறிவந்ததலிருந்து மாறுபட்டு, இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கே மிகப்பெரிய அடியாகும்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்வது, அதுவும் கூடிய விரைவில் செய்துகொள்வது பிரித்தானியாவுக்கு நல்லதுதான். அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அந்த ஒப்பந்தம் அவசியம், பொருளாதார அடிப்படையிலும் சரி, மனோவியல் ரீதியிலும் சரி.

இந்த கட்டுரை, பிரபல பிரித்தானிய பத்திரிகையான Daily Mailக்காக Dominic Sandbrook என்னும் வரலாற்றாளர் எழுதிய கட்டுரையின் சுருக்கமாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers